காய்கறி விற்பனை செய்ய ரூ.15 ஆயிரம் மானியம்
நடமாடும் வாகனம் மூலம் காய்கறி விற்பனை செய்ய ரூ.15 ஆயிரம் மானியம் என்று தோட்டக்கலை துணை இயக்குனர் கூறினார்.;
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பிலான இடுபொருட்கள், பழ மரங்கள் மானிய விலையில் பெறலாம்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ராபீ, காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை, மஞ்சள், தக்காளி உள்ளிட்டவற்றுக்கு காப்பீட்டு தொகையில் 5 சதவீத தொகையை பீரியமாக செலுத்து விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
இதன் மூலம் மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் ஏற்படும் இழப்பிற்கு நிவாரணம் பெறலாம்.
அரசு தோட்டக்கலை பண்ணை திட்டத்தின் மூலம் அரசு தோட்டக்கலை பண்ணை, கூடப்பட்டில் தரமான வீரியரக காய்கறி, மா, கொய்யா, சப்போட்டா, பப்பாளி உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
காய்கறிகளை நுகர்வோருக்கு நேரடியாக நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்ய ரூ.15 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற உழவன் செயலி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை திருப்பத்தூர் தோட்டக்கலை துணை இயக்குனர் தீபா தெரிவித்துள்ளார்.