ரூ.1.41 கோடி மதிப்பில் மின்வசதி மேம்படுத்தும் பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.41 கோடி மதிப்பில் மின்வசதி மேம்படுத்தும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்;

Update:2022-06-11 18:28 IST

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பில் மின்வசதி மேம்படுத்தும் பணியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதையொட்டி கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் முனுசாமி, செல்வராஜ் உள்பட கோவில் அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் அமைப்புகள் தற்போது உள்ளது.

கோவிலுக்குள் வயரிங் அமைப்புகளும் பல இடங்களில் சிதைந்து காணப்படுகிறது. எனவே அவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டு கோவிலில் தொன்மை மாறாமல் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் வயரிங் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.

அதேபோல் மின்கம்பங்களில் இருந்து கொண்டு வரப்படும் மின்கம்பிகள் உள்ளிட்ட அனைத்தையும் புதை வழித்தடமாக பூமிக்குள் பதித்து பாதுகாப்பாக கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்