துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தமிழக மீனவரின் கும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

தமிழக மீனவர் மீது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update:2023-02-17 22:23 IST

சென்னை,

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் கடந்த 14-ஆம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் ராஜாவின் குடும்பத்தினருக்கு, முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும் மீனவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்