பித்தளை காசை தங்க காசு என கூறி வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி; மர்ம நபருக்கு வலைவீச்சு

பித்தளை காசை தங்க காசு என கூறி வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-06-01 06:17 GMT

சென்னை சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). இவர் அப்பகுதியில் தந்தை ஜித்மலுடன் தோல் பை தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர், வாடிக்கையாளர் போர்வையில் வந்த மர்ம நபர் ஜித்மலிடம் 4 தங்க காசுகளைக் கொடுத்து ரூ.10 ஆயிரம் வாங்கி சென்றுள்ளார். இந்நிலையில் தன்னிடம் 4 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும், அதற்கு ஈடாக ரூ.90 லட்சம் கொடுத்தால் போதும் என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய சுரேஷ் தன்னிடம் ரூ.30 லட்சம் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார்.

இதைத்தொடந்து நேற்று முன்தினம் அயனாவரம் குன்னூர் சாலையில் சுரேஷ் பணத்துடன் காத்திருந்தார். அப்போது அந்த நபர் 2½ கிலோ போலி தங்க காசுகளை கொடுத்து விட்டு பணத்தை வாங்கி சென்றார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த சுரேஷ் சோதனை செய்ததில் அனைத்தும் பித்தளை காசுகள் என தெரிந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுரேஷ் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்