திண்டிவனத்தில்அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி
திண்டிவனத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திண்டிவனம்,
திண்டிவனம் தாலுகா பெரியாண்டப்பட்டு கிராமம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கிருஷ்ணராஜ் (வயது 33). இவரது நண்பர் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்கிற ஜெய்கணேஷ் (35) ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்த போது நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணராஜின் அண்ணன் மகன் சதீஷ்குமாருக்கு (27) அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி, ஜெய்கணேஷ் ரூ.3 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இதுகுறித்து திண்டிவனம் போலீசில் கிருஷ்ணராஜ் கொடுத்த புகாரின் பேரில், ஜெய்கணேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.