எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாகநதி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2024-02-24 01:46 GMT

கோப்புப்படம் 

சென்னை,

வேலூர் மாவட்டம் நாகநதி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

வேலூர் மாவட்டம் மற்றும் வட்டம், கணியம்பாடி உள்வட்டம், நாகநதி கிராமத்தில் நேற்று 23.02.2024 நடைபெற்ற எருது விடும் விழாவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சம்பவத்தில் வேலூர் வட்டம், அரியூர் மதுரா திருமலைக்கோடியைச் சேர்ந்த ராம்கி (வயது 24) த/பெ.சுப்பன் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில், உயிரிழந்த ராம்கி என்பவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்