ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.3½ கோடி மோசடி; 3 பேர் மீது வழக்கு

மணப்பாறையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.3½ கோடி மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-12-14 19:17 GMT

மணப்பாறையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.3½ கோடி மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகம்

மனப்பாறையை சேர்ந்தவர்கள் வினோத், காமராஜ். இவர்களிடம் சேலம் மாவட்டம், அயோத்திபட்டினத்தை சேர்ந்த வெங்கடாச்சலம், அவரது நண்பர்கள் கிருஷ்ணபிரகாஷ், சங்கர் பாபு ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

இதை நம்பிய வினோத், காமராஜ் ரூ.3½ கோடி வரை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் எந்த வித லாபத்தொகையும் கொடுக்கவில்லை.

வழக்குப்பதிவு

ேமலும் அசல் தொகையும் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனர். இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த வினோத் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்