திருச்சி விமான நிலையத்தில் ரூ.28½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.28½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-06-07 19:10 GMT

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவரை சோதனை செய்ததில் 487 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிவந்தது. காலணியில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்துள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.28½ லட்சம்ஆகும். தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்