சாலை விபத்தில் படுகாயமடைந்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சாலை விபத்தில் படுகாயமடைந்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-03-06 04:55 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பகுதி-2 கிராமம், பணகுடி தூய்மைப்பணியாளர் குடியிருப்பில் வசித்து வரும் வசந்தி (வயது 38) என்பவர் ஈஸ்ட் விசன் சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனம் மூலம் பணகுடி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 29.02.2024 அன்று பணகுடி புறவழிச்சாலையில் வசந்தி தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இரண்டு கால்கள் மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வசந்தியின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்