வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி ெசய்ததாக முன்னாள் அமைச்சரின் உதவியாளர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-12 17:56 GMT

திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருப்பத்தூர் சக்தி நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராமு புகார் மனு அளித்துள்ளார்.

அதில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபிலின் தனி உதவியாளராக இருந்த வாணியம்பாடி திருவள்ளூவர் நகரை சேர்ந்த ரபியா கவுல், அவரது கணவர் சிராஜ் ஆகிய இருவரும் தொழிலாளர் நலத்துறையில் எனது மகன் காமராஜூக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டனர். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. இதுகுறித்து கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போது வேலை வழங்க முடியாது என்று தெரிவித்தனர். கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டதற்கு பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும் என கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்