ரெயில்வே வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

ரெயில்வே வேலை வாங்கித்தருவதாக ரூ.10 லட்சம் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-21 22:01 GMT

திருமங்கலம்

திருமங்கலம் முகமதுஷாபுரத்தினை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவரது மகன் பிரகாஷ். எம்.பி.ஏ. பட்டதாரி. சுப்பிரமணியின் நண்பர் மூலமாக பெரியகுளம் கருத்துபட்டியை சேர்ந்த தங்கமாயன் பழக்கமானார். பிரகாசிற்கு ரெயில்வேயில் தான் பணிவாங்கி தருவதாக கூறி சுப்பிரமணியிடம் ரூ.10 லட்சத்தை கடந்த ஆண்டு தங்கமாயன் வாங்கியுள்ளார். ஓரிரு மாதங்களுக்கு பின்பு போலி ஆவணம் மூலமாக ஹவுரா ரெயில்வே நிலையத்தில் பணி கிடைத்திருப்பதாக கூறி பணி ஆணையை பிரகாசிடம் கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த சுப்பிரமணி, தங்கமாயனுக்கு நன்றி தெரிவித்து மகனை கொல்கத்தாவிற்கு அனுப்பிவைத்தார். அங்கு சென்று பணியில் சேர முயன்ற போது அது போலி பணி நியமனஆணை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து பிரகாசை திருப்பி அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியமும் தங்கமாயனிடம் தாங்கள் கொடுத்த ரூ.10 லட்சத்தை திருப்பி கேட்ட போது அவர் தட்டிகழித்து இழுத்தடித்துள்ளார். இதனால் தங்கமாயன் மீது தன்னை மோசடி செய்ததாக சுப்பிரமணி கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்