தரங்கம்பாடி, பூம்புகார் பகுதிகளில் கடல் சீற்றம்

தரங்கம்பாடி, பூம்புகார் பகுதிகளில் கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Update: 2022-11-09 18:45 GMT

பொறையாறு:

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தரங்கம்பாடியில் கடல் நேற்று சீற்றமாக காணப்பட்டது. இதன் எதிரொலியாக தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி, சின்னூர்பேட்டை, பெருமாள்பேட்டை வெள்ளகோவில், புதுப்பேட்டை, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டன. தரங்கம்பாடியில் கடல் அலை கரையில் உள்ள பழைய அஸ்திவார தடுப்பு சுவரையும் தாண்டி எழும்பியதால் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பினர்.

இதேபோல் பூம்புகார் பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. பூம்புகார் துறைமுகத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி இருந்தனர். பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் கடலோர கிராமங்களான வானகிரி, பூம்புகார் மற்றும்புது குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்