ஆனைமலை
ஆனைமலை அடுத்த தேவிபட்டணம் அருகில் சிலர் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியை ஈடுபட்டனர். அப்போது வேட்டைக்காரன் புதூர் மற்றும் உடைய குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 33) சந்திரசேகர் (42) சின்னமுத்து (35), சந்திரசாமி (48) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.