சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து கணினி உடைந்தது

சிமெண்டு காரை பெயர்ந்து விழுந்து கணினி உடைந்தது.

Update: 2023-07-04 19:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள முதலைமேடு ஊராட்சி மன்ற அலுவலகம் சேதம் அடைந்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர். அப்போது திடீரென அலுவலக மேற்கூரையில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதில் அலுவலகத்தில் இருந்த கணினி உடைந்து முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளும் உடைந்து நொறுங்கின. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்