அரியலூரில் ரோலர்ஸ் ஸ்கேட்டிங் போட்டி

அரியலூரில் ரோலர்ஸ் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.;

Update:2023-10-02 23:23 IST

 அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் தேர்ச்சி போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக நடந்த இப்போட்டிகளில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்வார்கள் என அரியலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் கண்ணன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்