நடந்து சென்றவரிடம் ரூ.10 ஆயிரம் வழிப்பறி
மதுரையில் நடந்து சென்றவரிடம் ரூ.10 ஆயிரம் வழிப்பறி செய்யப்பட்டது.;
மதுரை எம்.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 43). இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி, பால்பாண்டியிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.