ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

தஞ்சையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் ஸ்கூட்டரையும் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-06-27 19:27 GMT

தஞ்சையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் ஸ்கூட்டரையும் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற பேராசிரியர்

தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள ராஜீவ்நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 61). இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு பட்டுக்கோட்டை அடுத்த சாந்தாங்காடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். மேலும் அங்கு இருந்த பீரோவின் பூட்டையும் உடைத்து அதில் இருந்த 3 பவுன் நகை, ஒரு கைக்கெடிகாரம், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து ்சென்றனர். மேலும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு செல்லும் போது அங்கு இருந்த ஸ்கூட்டரையும் திருடிச்சென்றனர்.

போலீசில் புகார்

இந்த நிலையில் வீடு திரும்பிய மாரிமுத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்