அருட்சான்று நிலையத்தில் ரூ.3 லட்சம் கொள்ளை
அருட்சான்று நிலையத்தில் ரூ.3 லட்சம் கொள்ளைபோனது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள உலகநாதபுரத்தில் அருட் சான்று நிலையம் உள்ளது. இங்கு தேவாலயங்களில் பணிபுரியும் பாதிரியார்கள் தங்குவார்கள். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு திருப்பலிக்காக அங்கு இருந்த பாதிரியார்கள் சர்ச்சுகளுக்கு சென்று விட்டனர். அந்த சமயம் பார்த்து மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்பு பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.3 லட்சத்து 6 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை திருடிவிட்டு பின்பக்க கதவை உடைத்து அதன் வழியே தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அருட் சான்று நிலைய பொருளாளர் அகஸ்தியன் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.