சுற்றித்திரியும் குரங்குகள்

திருக்கடையூர் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-10-26 00:15 IST

திருக்கடையூர்:

திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட சன்னதி வீதி, தெற்கு வீதி, மேலவீதி, கீழவீதி, வடக்கு மடவிளாகம், தெற்கு மடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் தொந்தரவால் வீடுகள் மற்றும் கடைகளில் வைத்துள்ள பொருட்களான அரிசி, காய்கறி, பழவகைகளை குரங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. மேற்கண்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே திருக்கடையூர் ஊராட்சியில் சுற்றித்திரியும் குரங்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டுவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்