தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்

வரகூரில் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2022-06-20 19:05 GMT


வாணாபுரம் அருகே வரகூரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு தரப்பைச் சேர்ந்த 4 வாலிபர்கள் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி, அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து, சம்பந்தப்பட்ட 4 பேர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் வரகூர் பஸ் நிறுத்தத்தில் இரவு 9 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை வாணாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி திட்டி தாக்கியதாக விஜயகாந்த், மணி, சரத், தமிழ்பாண்டி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை மறியலால் அப்பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்