பா.ம.க.வினர் சாலைமறியல்

பா.ம.க.வினர் சாலைமறியல்

Update: 2022-11-27 18:45 GMT

பா.ம.க. கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சியின் முன்னோடிகளை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடி வருகிறார். அதன்படி நாகையில் நடந்த பா.ம.க. கூட்டத்திற்கு பிறகு தொண்டர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது மண்டபத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர்களை கட்சி தொண்டர்கள் வெளியே அனுப்பினர். கூட்டத்தை முடித்துவிட்டு அன்புமணி ராமதாஸ் புறப்பட்ட நிலையில் பா.ம.க. நாகை மாவட்ட செயலாளர் சித்ரவேல் மற்றும் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் பா.ம.க.வினர் மீது கல்வீசி தாக்க முயன்றனர். இதையடுத்து கல்வீசி தாக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரி நாகை- நாகூர் சாலையில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்