சாலைப்பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சாலைப்பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-03-05 01:42 IST

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் நெல்லை பாளையங்கோட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வைரவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

சாலைப்பணியாளர்களின் பணி நீக்க காலமான 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதிய பலன்களுக்கும், பணி கொடைக்கும் பொருந்தக்கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும். சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை உடனே வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநிலச் செயலாளர் அருணாசலம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்