திண்டுக்கல்லில் சாலை பணியாளர்கள் போராட்டம்

திண்டுக்கல்லில் சாலை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-03 21:00 GMT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், சாலை பணியாளர்களுக்கு பணி வழங்கிய மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான நேற்று, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் திண்டுக்கல் கோட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சேகர் வரவேற்றார். செயலாளர் சீனிவாசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஜெயசீலன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணியாளர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு விரைவாக பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ந்தேதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணி-நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்