சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-03-23 00:15 IST

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் எட்டயபுரம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் க.வேலுச்சாமி, த.குமார், செ.அண்ணாத்துரை, அ.கருப்பையா, இணை செயலாளர்கள் கோ.ஜான்சன், வேல்பாண்டி, ப.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செம்புலிங்கம் பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மா.சண்முகராஜா கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அண்ணாத்துரை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்