சின்னசேலம் அருகேலாரியில் மோட்டார் சைக்கிள் மோதல்; சாலை பணியாளர் சாவு
சின்னசேலம் அருகே லாரியில் மோட்டார் சைக்கிள் மோதல்; சாலை பணியாளர் உயிரிழந்தாா்.;
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே வி.அலம்பலம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் நாகராஜ் (வயது 48). நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சின்னசேலத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வி. அலம்பலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, பெத்தா சமுத்திரம் துணைமின் நிலையம் அருகே வந்த போது, சாலையோரத்தில் நிறுத்தி இருந்த டிப்பர் லாரியின் பின்புறம் நாகராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிக்ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு ரூபா (40) என்ற மனைவியும், தேஜஸ்ரீ (21) என்கிற மகளும், சாய் கார்த்திக் (18) என்கிற மகனும் உள்ளனர்.
விபத்து குறித்து ரூபா கீழ்குப்பம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.