அன்னசாகரம்-கொமத்தம்பட்டி வரைரூ.2½ கோடியில் சாலை விரிவாக்க பணிகோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தர்மபுரி
தர்மபுரி அன்னசாகரம் ரோடு முதல் கொமத்தம்பட்டி ரோடு வரை ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இந்த பணியை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜ், உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் வேடியப்பன், ஒன்றிய கவுன்சிலர் அஞ்சலி வேணு, சம்பத், கோபால், கூட்டுறவு சங்க தலைவர்கள் வேலு மல்லன், முருகன், கூட்டுறவு சங்க இயக்குனர் மாது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.