வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக சாலை சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

வடகிழக்கு பருவமழைக்கு முன்னால் சாலை பணிகளை விரைந்து முடித்திடவும், பொதுமக்களுக்கு இடையூறின்றி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.

Update: 2023-09-24 13:24 GMT

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டு மற்றும் சாலை சீரமைப்பு பணிகள் குறித்து சேவைத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் ரிப்பன் கட்டிட வளாகத்தில் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் சேவை துறைகளாகிய பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், நகர்புற எரிவாயு பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள் மூலமாக மண்டலம் ஒன்று முதல் 15 வரையிலான பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 20-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வெட்டுப் பகுதிகளில் சேவை துறை பணிகளை உடனடியாக முடித்து, சாலை சீரமைப்பு பணிகளை உடனடடியாக மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு பருவமழைக்கு முன்னால் சாலை பணிகளை விரைந்து முடித்திடவும், பொதுமக்களுக்கு இடையூறின்றி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்