சாலை சீரமைப்பு பணிகள் மும்முரம்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2023-08-24 19:45 GMT

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதையொட்டி ரூ.8 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சாலைகள் பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டது. இதையொட்டி நேற்று சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது. அதில் திண்டுக்கல் திருவள்ளுவர் சாலை மற்றும் ஏ.எம்.சி. சாலையில் பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, ஆணையர் மகேஸ்வரி, என்ஜினீயர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது புதிய சாலையின் தரம் குறித்து அளவீடு செய்யப்பட்டது. மேலும் சாலை அமைக்கும் பணியால் அரசு மருத்துவமனை வழியாக பஸ்நிலையம் வரும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் தலைமை தபால் அலுவலகம் வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்