பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து சாலை மறியல்

Road blockade சாலை மறியல்;

Update:2022-05-24 02:40 IST

துவரங்குறிச்சி, மே.24-

திருச்சி மாவட்டம், வளநாடு கைகாட்டி பகுதியில் குடியிருப்போர் செல்லும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை கண்டித்து சம்பந்தப்பட்ட குடியிருப்பை சேர்ந்தவர்கள் கைகாட்டி கடைவீதி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வளநாடு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்