தங்கச்சிமடத்தில் பெண்கள் சாலை மறியல்

தங்கச்சிமடத்தில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-27 00:15 IST

ராமேசுவரம், 

ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு 27 மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீனவர்கள் மீன் பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

தாலுகா செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த போராட்டத்தில் துணை செயலாளர் காரல் மார்க்ஸ், ஏ.ஐ.டி.யு.சி. மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் எஸ்.பி.ராயப்பன், நிர்வாகிகள் இன்னாசிமுத்து, லிட்டர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிலர் கையில் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்