தி.மு.க.வினர் சாலை மறியல்

தி.மு.க.வினர் சாலை மறியல் நடத்தினர்.

Update: 2023-06-07 18:09 GMT

தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை ஒலியமங்கலத்தில் நடத்தவிடாமல் அ.தி.மு.க.வினர் கொடியை ஊன்றி இடையூறு செய்வதாகவும், அதற்கு காரையூர் போலீசார் துணை போவதாகவும் கூறி ஒலியமங்கலம்-காரையூர் சாலையில் தி.மு.க. இளைஞரணியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, துணைச்செயலாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்