பா.ஜ.க.வினர் சாலை மறியல்

பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-01 19:28 GMT

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, தா.பழூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தா.பழூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் சுத்தமல்லி பிரிவு சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்டார தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கைது செய்யப்பட்ட அண்ணாமலையை விடுதலை செய்யக்கோரியும், பெண்களை இழிவாக பேசிய சைதை சாதிக்கை கைது செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

திருமானூர் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்தனர். செந்துறை போலீஸ் நிலையம் முன்பு பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து 9 பேரை செந்துறை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, கைது செய்த அனைவரையும் விடுவித்தனர். மறியலால் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்