அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் சாலை மறியல்

நாகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-06 12:19 GMT

நாகப்பட்டினம்:

நாகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

நாகை புதிய பஸ் நிலையம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுபாதேவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லலிதா முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் மாலா, தமிழ்ச்செல்வி, குணவதி, வளர்மதி, அகிலா, சுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற புகார்களை அலட்சியப்படுத்தக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

80 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 80 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட

Tags:    

மேலும் செய்திகள்