லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் ேமாதி வாலிபர் பலியானார்.

Update: 2022-07-23 20:33 GMT

பேராவூரணி;

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மாதி வாலிபர் பலியானார்.பேராவூரணி அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வாலிபர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் வீரமணி(வயது 27). இவர், பேராவூரணி-ஆவணம் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார்.நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்ததால் டீக்கடையை மூடிவிட்டு 10 மணியளவில் செங்கமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

விபத்தில் பலி

பேராவூரணி பெரியகுளம் அருகே அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வீரமணி பலியானார்.விபத்து குறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த மாதம் திருமணம்

விபத்தில் பலியான வீரமணிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அடுத்த மாதம்(ஆவணி) திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் வீரமணி பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்