நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் பல்வேறு சமுதாயத்துக்கு உட்பட்ட மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் மயான சாலையை அளவீடு செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அப்போது ஒன்றிய கவுன்சிலர் புனிதம் பழனிசாமி, வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மற்றும் நில அளவையர் உள்பட பலர் உடன் இருந்தனர்.