காங்கயம் அருகே சாலை விரிவாக்கப் பணியின் போது மண்ணால் மூடப்பட்ட அடி குழாயை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்ணால் மூடப்பட்ட அடிகுழாய்
திருப்பூர் மாவட்டம் காங்கயம், பழையகோட்டை சாலையில் சாலை விரிவாக்க பணிகளும், சிறு பாலம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சத்திரவலசு பிரிவு அருகே சாலையின் இரு புறங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைத்து மண்ணை கொட்டி சாலையை மேடாக்கும் பணிகள் நடைபெற்றது.
அங்கு சாலையோரத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஒரு அடி குழாய் இருந்தது. சாலையில் மேடாக்கும் பணிகளின் போது நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அடி குழாயை கழற்றி அப்புறப்படுத்தாமல் அப்படியே மண்ணை போட்டு மூடிவிட்டனர்.
பணி முடிந்தவுடன் அகற்றப்படுசாலை விரிவாக்க பணியின் போது மண்ணால் மூடப்பட்ட அடி குழாய்சாலை விரிவாக்க பணியின் போது மண்ணால் மூடப்பட்ட அடி குழாய்ம்
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அடி குழாயை அப்புறப்படுத்திவிட்டு சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சாலை விரிவாக்க பணிகள் மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணி முழுமையாக முடிவடைந்த பின்னர் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் குவியல்கள் சமன் செய்து, பின்னர் பயன்பாட்டில் இல்லாத அடிகுழாய் கழற்றி அப்புறப்படுத்தப்படும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.