கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்று திருவிழா
கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்று திருவிழா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் செய்யாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
கலசபாக்கம்
கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்று திருவிழா நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் செய்யாற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஆற்று திருவிழா
சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும் காலமான உத்திராயணம் காலத்தை முன்னிட்டு ரதசப்தமி நாளான இன்று கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்று திருவிழா என்னும் தீர்த்தவாரி நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனுடன் அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.
இதையடுத்து டிராக்டர் வாகனத்தில் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கம் செய்யாற்றுக்கு வந்தார்.
அப்போது அண்ணாமலையாருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர்.
சிறப்பான வரவேற்பு
மேலும் கலசபாக்கம் செய்யாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள தென்பள்ளிப்பட்டு கிராம மக்களின் சார்பில் அண்ணாமலையாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பிறகு ஆற்று திருவிழாவுக்காக அண்ணாமலையார் பெரிய ரிஷப வாகனத்தில் செய்யாற்றில் இறங்க தொடங்கினார். அப்போது ஆற்றின் வடகரையில் கலசபாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரரும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி செய்யாற்றில் இறங்கினார்.
செய்யாற்றில் 2 சாமிகளும் நேருக்கு நேராக ஒரு சேர ஆற்றில் இறங்கி ஆனந்த நடனத்துடன் ஆடியபடியே வந்தனர்.
தீர்த்தவாரி
பக்தர்களின் பரவசத்துடன் 2 சாமிகளும் தென்கிழக்கு பகுதியை நோக்கி சூரிய பகவானுக்கு காட்சி கொடுத்தனர்.
பின்னர் செய்யாற்றில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் அண்ணாமலையாரும், திருமாமுடீஸ்வரரும் தனித்தனியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றன.
விழாவில் கலசபாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.