தாழ்வான கழிவுநீர் கால்வாயால் விபத்து அபாயம்

தாழ்வான கழிவுநீர் கால்வாயால் விபத்து அபாயம் நிலவுகிறது.;

Update: 2023-08-29 20:39 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பில் இருந்து வடக்கு தெரு வழியாக மகாராஜபுரம் செல்லக்கூடிய சாலையானது மிகவும் குறுகலானது. இந்த சாலையின் ஓரத்தில் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாய் சாலையிலிருந்து 3 அடி பள்ளத்தில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பஸ் மற்றும் கனரக வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்லும் போது எதிரே வரும் வாகனங்களால் தடுமாறி கழிவு நீர் கால்வாய்க்குள் இறங்கி விபத்துக்கு உள்ளாகி வருகின்றது. இந்த சாலை வழியாக தான் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகின்றன. ஆதலால் பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்