கிணத்துக்கடவு அருகே சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்ைக எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

கிணத்துக்கடவு அருகே சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் சாைலயை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.

Update: 2023-07-16 19:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் சாைலயை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.

சாலை ஓரங்களில் பள்ளம்

கிணத்துக்கடவு அருகே வீரப்ப கவுண்டனூர் சோதனை சாவடியில் இருந்து ரெங்கே கவுண்டன் புதூர் செல்லும் வழியில் தமிழக -கேரளா எல்கையை ஒட்டி தார் சாலை செல்கிறது. இந்த தார் சாலை கேரளா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக -கேரள எல்லை பகுதியில் பெய்த பலத்த மழையால் இந்த பகுதியில் உள்ள தார் சாலை ஓரங்களில் மழை நீர் வழிந்து சென்று சாலையோரம் குழிகள் மற்றும் பள்ளம் ஏற்பட்டது. அதில் உள்ள கற்கள் தார் சாலையை மூடி கிடைக்கிறது. இந்த சாலையில் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

விபத்து அபாயம்

தற்போது சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் சாலையோரம் இருக்கும் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்கள் உள்ளே இறங்கி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது.

அதனால் இதனை தடுக்க கேரளா நெடுஞ்சாலை த்துறை அதிகாரிகள் தமிழக கேரள எல்லையில் உள்ள நெடுஞ்சாலைகளை பார்வையிட்டு சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரிசெய்ய வேண்டும். மேலும், சாலை மூடி கிடக்கும் ஜல்லிகற்களை அகற்றி வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்றுவர கேரளா நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்