சேதமடைந்த பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

சேதமடைந்த பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Update: 2022-10-22 19:39 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலை மூலம் பல்வேறு பகுதிகளுக்கு எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக சேத்தூர் பகுதியில் போலீஸ் நிலைய எல்லை தொடங்கும் இடத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சேத்தூர் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் லாரி மோதியது. இந்த பாலத்தை சீரமைக்காமல் அப்படியே விட்டு விட்டனர். தற்போது பாலத்தின் சேதமடைந்த பகுதி அதிகரித்து கொண்டே விட்டது. பாலம் அமைந்துள்ள பகுதி மிகவும் குறுகலான இடமாக உள்ளதால், ஒரே நேரத்தில் இரண்டு கனரக வாகனங்கள் கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தடுப்பு சுவர் சேதமாகி இருப்பதை தெரிவிக்க வைக்கப்பட்டிருந்த 3 தடுப்பு பலகைகளில் இரண்டு ஓடைக்குள்ளே விழுந்து விட்டது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்து எதுவும் ஏற்படுவதற்கு முன்னர் சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்