ரிஷிவந்தியம் அரசு கல்லூாியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு 18-ந்தேதி வரை நடைபெறுகிறது

ரிஷிவந்தியம் அரசு கல்லூாியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.

Update: 2022-11-14 18:45 GMT

ரிஷிவந்தியம், 

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இளம் அறிவியல், புள்ளியியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

12-ம் வகுப்பில் கணிதம் படித்த மாணவர்கள் மட்டுமே கணினி அறிவியல், புள்ளியில் பாட பிரிவிலும், வணிகவியல் படித்தவர்கள் மட்டுமே இளம் வணிகவியல்(பி. காம்.) பாடப்பிரிவிலும், பொருளியல் படித்தவர்கள் மட்டுமே எக்கனாமிக்ஸ் பாடப்பிரிவிலும் சேர முடியும். ஆகையால் இதுவரை பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர தவறவிட்ட மாணவ-மாணவிகள் நேரடியாக கல்லூரியில் சேர அரசு இறுதி வாய்ப்பு அளித்துள்ளது. மேற்கண்ட தகவல் ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்