நெல்லையில் அரிசி, பருப்பு வகைகள் விலை உயர்வு
விளைச்சல் குறைவால் நெல்லையில் அரிசி, பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளது.;
விளைச்சல் குறைவால் நெல்லையில் அரிசி, பருப்பு வகைகளின் விலை உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு போன்றவற்றின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. விளைச்சல் குறைவு மற்றும் வறட்சி காரணமாக அவற்றின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
நெல்லையில் சில்லறை மளிகை கடைகளில் பருப்பு வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு கடந்த வாரம் கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ரூ.170-க்கு விற்பனையானது. சிறுபருப்பு ரூ.105-ல் இருந்து ரூ.115 ஆகவும், கடலை பருப்பு ரூ.68-ல் இருந்து ரூ.88 ஆகவும், தொலி உளுந்து ரூ.98-ல் இருந்து ரூ.120 ஆகவும், உருட்டு உளுந்து ரூ.144-ல் இருந்து ரூ.154 ஆகவும் உயர்ந்துள்ளது.
அரிசி வகைகள்
இதேபோல் அரிசி விலையும் 1 கிலோவுக்கு ரூ.4 வரை அதிகரித்து இருக்கிறது. கன்னட பொன்னி கிலோ ரூ.40 முதலும், அட்சய பொன்னி கிேலா ரூ.60 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது 25 கிலோ அரிசி மூட்டை ரூ.1,500-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.1,600 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் மதுரை பிராண்ட் அரிசி வகைகள் கிலோவுக்கு ரூ.64 வரை விற்பனை ஆகிறது.