மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் - நாளை வரை அவகாசம்

சான்றிதழ்களில் திருத்தம் செய்து அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளைக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.;

Update:2023-06-11 07:44 IST

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வி துறையில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. தற்கால மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வுக்காக கொடுத்த பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி உள்ளிட்ட தங்கள் சுய விபரங்களில் பிழைகள் இருந்தால், அதை, பள்ளி தலைமை ஆசிரியர் வழியே திருத்தலாம்.

சான்றிதழ்களில் திருத்தம் செய்து அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளைக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு அதில் திருத்தம் செய்யப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்