தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்;இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-07-25 18:48 GMT

கொல்லங்கோடு, 

தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மாநாடு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொல்லங்கோடு வட்டார மாநாடு நடந்தது. இதற்கு சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். இதில் புதிய தலைவராக றாஸிக், செயலாளராக ரமேஷ், பொருளாளராக ஜெஸ்டின்ராஜ் உள்ளிட்ட 12 பேர் கொண்ட வட்டாரக்குழுவை தேர்வு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் சங்க நிர்வாகிகள் எட்வின் பிரைட், ரமேஷ், விஜயமோகன், ஹரிகுமார், சனல் குமார் ஆகியோர் பேசினர்.

கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முழு நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும், கண்ணநாகம் சந்திப்பில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதற்கு வடிகால் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும், தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பி.எச்.எச். அட்டை வழங்க வேண்டும், நகராட்சி பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்