மின் கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும்

மின் கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்று த.மா.க.வினர் மனு காெடுத்தனா்.

Update: 2022-07-25 17:40 GMT

கடலூர்:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஞானச்சந்திரன் தலைமையில் மாநில துணைத்தலைவர் பி.ஆர்.எஸ். வெங்கடேசன், மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் எம்‌.எல்.ஏ.க்கள் ஜெயச்சந்திரன், புரட்சிமணி, மாநகர தலைவர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், நிர்வாகிகள் அழகப்பன், சேகர், கடலூர் கிழக்கு மாவட்ட துணை தலைவர் சாம்பசிவம், துணை பொதுச்செயலாளர் குணசீலன், வடலூர் அன்பு, கலைவாணன், நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் கந்தன், கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. கடந்த சில வருடமாக கொரோனா தொற்றால் பாதகிக்கப்பட்டு சிறு தொழில், குறு தொழில்கள் நசிந்து, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டுவரி, சொத்துவரியை உயர்த்திய நிலையில் தற்போது மின்சார கட்டண உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. ஆட்சி பொறுப்பு ஏற்று ஓராண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசு ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற மின்கட்டண உயர்வு என்ற அறிவிப்பினை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்