மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.
தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் (சென்னை மண்டலம்) எம்.வி. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழ்நாடு மின்வாரி ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் தொழில்கள் நலிவடைந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும் தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் இயங்கி வரும் லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அதனால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.