வருவாய்த்துறை அலுவலர்கள் களத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும்-கலெக்டர் உத்தரவு
வருவாய்த்துறை அலுவலர்கள் களத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக,்டர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.
வருவாய்த்துறை அலுவலர்கள் களத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக,்டர் பாஸ்கரபாண்டியன் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை சார்நிலை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள், உட்பிரிவு பட்டா மாற்றம், உட்பிரிவு இலவச வீட்டுமனை பட்டாக்கள், நிலம் மாற்றம், நில உரிமை மாற்றம், பட்டா மேல்முறையீடு, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாதி சான்றிதழ், பழங்குடியினர் சாதிசான்றிதழ், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கோப்புகள், இ-ஆபிஸ், நிலம் குத்தகை ஆகியவற்றில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
அனைத்து வருவாய்த் துறை அலுவலர்கள் களத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலஅளவை பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனைத்து கிராமங்களிலும் வாழுகின்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை விரைந்து எடுக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டகள் சென்றடைகின்ற வகையில் வருவாய் துறை சார்நிலை பணியாளா;கள் பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அலுவலர்கள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்.வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், முத்தையன், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, மற்றும் அனைத்து தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.