ஓய்வு பெற்ற ஆசிரியரின் கண்கள் தானம்
ஓய்வு பெற்ற ஆசிரியரின் கண்கள் தானம் செய்யப்பட்டது.;
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பலகுடி வடக்கு தெருவில் வசித்து வந்தவர் சுந்தர மகாலிங்கம் (வயது82). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் இவர் நேற்று உயிரிழந்தார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு தான் இறந்த பிறகு கண் மற்றும் உடலை தானம் செய்ய வேண்டும் என எழுதி வைத்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சுந்தர மகாலிங்கத்தின் உடல் மற்றும் கண்களை தானமாக வழங்கினர்.