கார் மோதி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சாவு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடியை சேர்ந்தவர் திரவியம் (வயது 78). முன்னாள் ராணுவ வீரர். இவர் கொட்டாம்பட்டி அருகே வலைச்சேரிபட்டி விலக்கு நான்கு வழி சாலையில் வரும்போது கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் திரவியம் பரிதாபமாக இறந்தார்.
கொட்டாம்பட்டி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடியை சேர்ந்தவர் திரவியம் (வயது 78). முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று மாலை சிறுகுடியில் இருந்து கொட்டாம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சென்னையை சேர்ந்த ரேவதி, கோவையை சேர்ந்த வினோதினி ஆகியோர் திருச்சியில் இருந்து வாடகை காரில் தென்காசியில் நடக்கும் தோழியின் திருமணத்திற்கு சென்றனர். கொட்டாம்பட்டி அருகே வலைச்சேரிபட்டி விலக்கு நான்கு வழி சாலையில் வரும்போது கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த திரவியம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனைமுத்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான குளித்தலையை சேர்ந்த மனோஜ்குமாரை (22) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.