ஓய்வு பெற்ற வனக்காவலர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

ஓய்வு பெற்ற வனக்காவலர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

Update: 2023-04-08 18:26 GMT

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 68). இவர் வனக்காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மகன் பிரபாகரனுடன் (34) கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்வதற்காக அரியலூரில் இருந்து பஸ் மூலம் சென்றார். பின்னர் தற்காலிக பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோவிலுக்கு 2 ேபரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கடுகூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (68) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் ஞானசேகரன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஞானசேகரனை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஞானசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்